தெவட்டஹக பள்ளிவாசலில் பிரார்த்தனையில் ஈடுபட்ட ரவி
கொழும்பு-07 இல் உள்ள தெவட்டஹக பள்ளிவாசலில் உள்ள செய்தினா உஸ்மான் வலியுல்லாஹ் தர்ஹாவின் 200வது வருடாந்த கந்தூரிப் பெருவிழாவினை முன்னிட்டு ஸூப்கான மௌலித், மனாகிப், கஸீதா,; விஷேட பயான் மற்றும் விஷேட துஆப் பிரார்த்தனைகள் தெவட்டஹக பள்ளிவாசலின் தலைவர் றியாஸ் ஷாலி தலைமையில் நேற்று முன்தினம் (12) இடம் பெற்றது.
கடந்த 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான விஷேட சமய நிகழ்வுகள் நேற்று 12ஆம் திகதி தெவட்டஹக பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி ஐ.எம். பாறுக் மக்கியின் பயான் மற்றும் விஷேட துஆப் பிரார்த்தனையுடன் நிறைவு பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதியாகக் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க கலந்து சிறப்பித்ததுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூஸைன் பைலா, பள்ளிவாசலின் முன்னாள் மற்றும் தற்போதைய நிருவாகிகள் உள்ளிட்ட பெருந்திரலான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.




Comments
Post a Comment