முன்னாள் அமைச்சர் விஜயதாச அமைச்சிலிருந்து வெளியேறினார்
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனக்கு வழங்கப்பட்டிருந்த வாகனத்தை அமைச்சில் ஒப்படைத்து அமைச்சிலிருந்து வெளியேறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்ய இன்று நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி, அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சிலிருந்து பதவி நீக்கம் செய்யும் கடிதம் ஜனாதிபதி செயலகத்தினால் அவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதேவேளை, தான் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேற மாட்டேன் என விஜயதாச ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment