அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான வரி நீக்கம்!


47 வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான வரிகளை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரிசி, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு இவ்வாறு வரி நீக்கப்பட உள்ளது.

வாழ்க்கைச் செலவு குறித்த அமைச்சரவை உபகுழு கூடி அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான வரிகளை நீக்குவது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்காக அறவீடு செய்யப்படும் 5 ரூபா வரி 25 சதமாக குறைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால் மா, கோதுமை மா போன்றவற்றுக்கான வரிகளும் குறைக்கப்பட்டுள்ளன.

Comments