கட்சி செயலாளர்கள் – தேர்தல் ஆணைக்குழு இடையே கலந்துரையாடல்


கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (04) இடம்பெறவுள்ளது.
உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் மற்றும் மாகாண சபை தேர்தல் தொடர்பாக குறித்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் வேட்பாளர் அட்டவணை தயாரிப்பது தொடர்பிலும் கட்சிகளின் செயலாளர்களுடன் கலந்துரையாடவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் பெப்பரல் அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் தேர்தல் தொடர்ந்தும் காலதாமதப்பட்டு வருவதனை தேர்தல் ஆணைக்குழு தலைவரின் கவனத்திற்கு கொண்டுவந்ததாக பெப்பரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Comments