கல்முனை நாய் தின்ற பிலால் போன்றுள்ளது : இதுவும் மு.கா சாதனையே
அமைச்சர் பைசர் முஸ்தபாவின் அண்மைய கருத்துக்களை நோக்குகின்ற போது கூடியவிரைவில் சாய்ந்தமருது,க்கான உள்ளுராட்சி அதிகாரம் கிடைப்பதுக்கான வாய்ப்புக்கள் குறையவே உள்ளது. அதனால் எதிர்வரும் சில மாதங்களில் நடைபெற எதிர்பார்க்கப்படும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வழமைபோன்று இம்முறையும் கல்முனை மாநகரசபை தேர்தலில் சாய்ந்தமருது,மருதமுனை,நட்பட்டிமுனை,பாண்டிருப்பு வேட்பாளர்கள் போட்டியிட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அரசியல் அதிகாரமிக்கவர்களின் உச்சகட்ட சதியே தவிர வேறில்லை.
சாய்ந்தமருதுக்கான தனியான சபையை பெற்றுக்கொடுக்க இதயசுத்தியுடன் போராடிய மக்கள் காங்கிரசின் தலைமைகளையும் (அமைச்சர் றிசாத்,ஜமீல்,சிராஸ் போன்றோரும் இன்னும் பல ம.கா முக்கியஸ்தர்களும்.) தேசிய காங்கிரசின் தலைமை முன்னாள் அமைச்சர்
அதாவுல்லாஹ்,அவர்களையும் மற்றும் பல சமூக நிறுவனங்களையும் மக்கள் மறந்துவிடவுமில்லை. இதனை வைத்து அரசியல் காய் நகர்த்திய அரசியல்வாதிகளை மறந்துவிடவுமில்லை என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றே.
என்றாலும் இனிவரும் தேர்தல்களில் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டிய கடமை இப்போது கனிந்துள்ளது. கல்முனை மாநகர கௌரவ முதல்வர்களாக இருந்த அஸ்மீர்,ஹரீஸ், மசூர் மௌலானா, சிராஸ் ,நிஸாம் காரியப்பர் போன்றோர்களில் யார் குறுகிய காலத்தில் அந்த பதவியின் உச்சத்தை கொண்டு அதிக சேவைகளை வழங்க போராடியவர் என்பதை மக்கள் நன்றாக அறிந்து செயலாற்ற முன்வரவேண்டும்.
முஸ்லிங்களின் முகவேற்றிலையான கல்முனை மாநகரம் " நாய் தின்ற பிலால் போன்று " மிக அசிங்கமாக இருப்பது இனியும் தொடரவேண்டுமா ?
சாய்ந்தமருது,கல்முனை,மருதமுனை,மக்களை பிரித்து தமது அரசியல் காய்நகர்த்தலை மேற்கொள்ளும் இவர்கள் தொடர்ந்தும் உங்களை மடையர்களாக வைத்திருக்க வேண்டுமா ?
இவ்வளவு காலமும் கல்முனையை ஆட்சிசெய்த மு.கா எதனை கல்முனை மண்ணுக்கு செய்துள்ளது என்பதை எம்மால் கூற முடியுமா ?
பாட்டுக்கும்,கோஷத்துக்கும் அடிமையான மடையர்கள் எனும் பட்டத்தை இனிமேலும் சுமக்க வேண்டுமா ?
இனிமேலாவது நமது தேவைகளை நன்றாக அறிந்த மக்கள் பிரதிநிதிகளை உரிய இடங்களுக்கு அனுப்ப எமது மக்கள் முன்வர வேண்டும். புதிய பாதையில் புதிய கட்சிகளிடம் ஆட்சி அதிகாரங்களை வழங்கி அவர்களின் செயத்திறனை நாம் அறிந்துகொள்ள முன்வராதபட்சத்தில் எமது தலைவிதியை யாராலும் மாற்ற முடியாமல் போகிவிடும்.
ஹுதா உமர்
2017.ஆகஸ்ட் .27

Comments
Post a Comment