மீண்டும் வரவேண்டும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி
ஆட்சி மாற்றம் நாங்கள் கொண்டு வந்தது என்று சொல்லும் முஸ்லிம் தலைவர்களே திட்டங்கள் பல தீட்டி பள்ளிவாசலா மஹிந்தையா என்று அப்பாவி மக்களை சூடாக்கி பாராளுமன்றத்தின் கதிரைகளை சூடேற்றும் சோம்பேறிகளே ரணில் நல்லாட்சியில் மாடா மேய்கின்றிர்கள்
தம்புள்ளை பள்ளிவாசல் தீர்வு கண்டீர்களா ?
அளுத்கமை கலவரம் கைது , தீர்வு கண்டீர்களா ?
இறக்காமம் மயகல்லி.சிலை நிதானம் கொண்டீர்களா ?
பயங்கரவாதி எந்த அரசாங்கம் வந்தாலும் மட்டையா , மறக்கலையா , தம்பிலா , என்று முஸ்லிம்களுக்கு எதிராக கூக்குரல் விட்ட பெரும்பான்மை சமுக இளைஞ்சர்களை கைது செய்திர்களா கொடிய விசம் கொண்ட மனிதன் தேரர் ஞானசார என்ற பௌத்த மதகுருவை உங்களாலே என்ன செய்ய முடிந்தது நான்கு பொலிஸ் படை போட்டு தேடினார்களே நாடக கதை சொன்னார்களே கூட்டில் அடித்தார்களா
நல்லாட்சி வந்ததும் இனவாதிகளை நாய் கூட்டில் அடிப்போம் என்றவர்கள் என்ன ஆனார்கள் அல்லாஹ் , எம்பெருமானார் ரசூலுல்லாஹ் புனித குர்ஆன் என்றேல்லாம் இழிவு படுத்தியவர்களை பாதுகாத்தார்களே எங்கே ஐயாமாரே நல்லாட்சி புனித ஆட்சி வடமாகாண முஸ்லிம் மக்கள் குடியேற்றம் பெற்றீர்களா முஸ்லிம்களின் காணி பிரட்சினைகளுக்கு தீர்வுதான் கண்டீர்களா
காணி ,(வட்டமாட்டு) வீட்டுத்திட்டம் (நுரைச்சோலை) என்ன முடிவு கண்டீர்களா அது மட்டுமா இரவு பகலாக கட்சி என்றும் தலைவன் என்றும் கொடிகள் கட்டி படங்கள் ஒட்டி பாடுபட்ட போராளிகளுக்கு ஒரு வாய் சோறு போட்டீர்களா கப்பு விட்டு கப்பு மாறும் குரங்கை போன்று நீங்கள் ஆட்சி விட்டு ஆட்சி மாறலாம் அனால் மக்கள இன்று உண்மையை உணர்ந்து கொண்டதாலே உங்களை எதிர்க்கும் இயந்திரமாக மாறிவிட்டார்கள்
ஒன்று மட்டும் தெளிவாக தெரிகின்றது அதாவுல்லா அன்று சொன்னவைகள் மட்டும் இன்று உண்மையென்று மஹிந்தையும் மைதிரியும் ரணிலும் எங்களுக்கு ஒன்றுதான் அனால் மஹிந்தையோடு சமரசம் போகலாம் ரணிலோடு அது ஆகாது காரணம் பெரும் தலைவர் அஸ்ரப் சொல்லிச்சென்ற முக்கிய பாடம் எங்கள் கைவசம் இன்றும் நிலுவையில் ..
சபீக் அஹமட்
இக்கட்டுரையாளர்


Comments
Post a Comment