ஸ்ரீ ல.சு.க.யில் முக்கிய ஏழு பேரை நீக்க தீர்மானம், எம்.பி. பதவியும் பறிபோகும் ?
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாப்புரிமையை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையைப் பறிப்பதற்கு கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உறுப்புரிமையை இழப்பவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமையும் 19 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ரத்தாகும் அறிகுறி காணப்படுவதாக கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
பிரசன்ன ரணதுங்க, சனத் நிஷாந்த, பவித்ரா வண்ணியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன, திலும் அபேகுணவர்தன, லொஹான் ரத்வத்த மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோரே இவ்வாறு நீக்கப்படவுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Comments
Post a Comment