விஜேதாச ராஜபக்ஷ மஹிந்தவுக்காக செயற்பட்டார், புலனாய்வு தகவல் உண்டு- நலின் பண்டார
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் கூட்டு எதிர்க் கட்சியின் பொது அபேட்சகராக கொண்டுவருவதாக எதிர்பார்ப்பொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே அவர் அரசாங்கத்திலிருந்து கருமமாற்றிக் கொண்டிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிரியாக தனது வீட்டுக்கு வெளியே உள்ளவருக்கு முகம் கொடுக்க முடியுமாக இருந்தாலும், நண்பனாக வீட்டுக்குள்ளேயே இருப்பவருக்கு முகம்கொடுப்பது கடினமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டு எதிர்க் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் விஜேதாச ராஜபக்ஷ செயற்பட்டுள்ளமைக்கான புலனாய்வுத் துறைத் தகவல்கள் உள்ளதாகவும் நலின் பண்டார எம்.பி. நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கூறியுள்ளார்.


Comments
Post a Comment