ஜப்பான் கடற்படைக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்


உத்தியோகபூர்வ நல்லிணக்க விஜயமொன்றை மேற்கொண்ட ஜப்பான் நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான ‘அமகிரி’ எனப்படும் கப்பல் நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த ‘அமகிரி’ கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்றனர்.

இதேவேளை, ஜப்பானின் 2வது பாதுகாப்பு பிரிவின் கட்டளை பிரிவு அதிகாரி சைற்றோ மற்றும் கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் மொறோ ஹட்சுகிரோ ஆகியோர் கடற்படை தெற்கு நிறைவேற்று தலைமையகத்தில் நிறைவேற்று கட்டளை தளபதி றியர் அட்மிரல் நிசாந்த உலுகட்டுனவை சந்திக்கவுள்ளனர்.
மூன்று நாட்கள் இலங்கையில் தரித்திருக்கவுள்ள இக்கப்பல் இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்து கப்பலான சமுதுரவுடன் இணைந்து கூட்டுப்பயிற்சிகள் சிலவற்றில் பங்கெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments