முஸ்லிம் பாடசாலை விடுமுறை மாற்றத்தினால் பிற மத ஆசிரியர்கள் பாதிப்பு
கல்வி அமைச்சில் முறைப்பாடு
முஸ்லிம் பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான விடுமுறை தினம் மாற்றப்பட்டுள்ளதால் முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் சிங்கள ஆசிரிய, ஆசிரியைகளுக்கு அநீதி நிகழ்ந்திருப்பதாக கல்வி அமைச்சருக்கும் அதன் செயலாளருக்கும் பாதிப்புக்குள்ளான ஆசிரியர்களால் எழுத்து மூலமான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; முஸ்லிம் பாடசாலைகளில் இரண்டாம் தவணை விடுமுறை ஆரம்பமாகும் தினம் இம்மாதம் 18 ஆம் திகதியாகும். ஆனால் கல்வியமைச்சு திடீரென 17 ஆம் திகதி அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஏற்கனவே குறித்திருந்த தினத்தை இரத்துச் செய்து செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து விடுமுறை ஆரம்பிப்பதாக அறிவித்திருந்தது.
சமய அமைப்பொன்றின் வேண்டுகோளுக்கு இணங்கவே மேற்படி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இவ்வாறு விடுமுறை தினங்கள் அமுல்படுத்தப்படுவதால் தம்மை சிங்களப் பாடசாலைகளுக்கு மாற்றஞ் செய்து தரும்படியும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் பாடசாலைகளில் கற்பிக்கும் சிங்கள ஆசிரியர்கள் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள முறைப்பாட்டு அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்;
சிங்களப் பாடசாலைகளில் படிக்கும் தம் பிள்ளைகள் விடுமுறையில் இருக்கையில் அவர்களுடன் விடுமுறையைக் கழிக்க முடியாதுள்ளது. அத்துடன் ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு, பயணங்கள், வைபவங்களில் கலந்துகொள்ள முடியாதவாறு தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மேலும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் தம் பிள்ளைகளின் பரீட்சை தொடர்பான வேலைகளைச் செய்வதிலும் தாம் வாய்ப்பை இழக்கும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் முறைப்பாட்டுக் கடிதத்தில் காரணங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

Comments
Post a Comment