வில்பத்து சுற்றுலா – இன்று முதல் மட்டுப்படுத்தப்படும்
வில்பத்து தேசிய சரணாலயத்தை சுற்றுலா பயணிகளுக்கு பார்வையிடுவதற்கு திறந்துவிடப்படும் நேரம் இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 6.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனஜீவராசிகள் அமைச்சு அறிவித்துள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறிப்பிட்ட காலப்பகுதியில் 30 சுற்றுலா பயணிகள் மாத்திரமே அனுமதிக்கபடுவார்கள் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்


Comments
Post a Comment