இலஞ்ச ஊழல் தொடர்பில் முன்னாள் பிரதேச சபை தலைவர் ஒருவர் கைது
இலஞ்சம் பெற்றமை தொடர்பில் தங்கல்லை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை தனது வீட்டில் இலஞ்சம் பெற்ற வேளையிலே அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்தார்.
மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரது வீட்டுத்திட்டத்திற்கு தங்கல்லை பிரதேச சபையின் அனுமதியை பெறுவதற்காகவே ஒரு இலட்சம் ரூபா இலஞ்சமாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கைது செய்யப்பட சந்தேகநபர் அங்குனுகொலபெலஸ்ஸ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது


Comments
Post a Comment