சுதந்திரக் கட்சியின் தீர்மானத்திற்கு ஐ.தே.மு எதிர்ப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்திற்கு ஐக்கிய தேசிய முன்னணி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அனைத்து மாகாண சபைகளினதும் தேர்தலை ஒரே நாளில் நடாத்துவது குறித்த உத்தேச 20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கத்தை வெளியிட்ட சுதந்திரக் கட்சி பின்னர் அதன் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்த செயற்பாடு குறித்து ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்கவே ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதியை சந்திக்க உள்ளது.


Comments
Post a Comment