மஹிந்தவின் குடியுரிமையை பறிக்க சூழ்ச்சித் திட்டம்: சாலிந்த திஸாநாயக்க


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமையை பறிப்பதற்கு சூழ்ச்சித் திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மஹிந்தவை கொலை செய்ய, சிறையில் அடைக்க அல்லது குடியுரிமையை பறிக்க சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

ஸ்ரீ விக்ரம ராஜசிங்க மன்னன் இறக்கும் வரையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்டில் மஹிந்தவிற்கும் அவ்வாறு நிகழுமா?

ஆப்கானிஸ்தான், துருக்கி, சிரியா போன்ற நாடுகளுக்கு செய்ததை அமெரிக்கா இலங்கையிலும் செய்கின்றது.

இதன் ஓர் கட்டமாகவே மஹிந்த ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். அமெரிக்கா திருகோணமலையை கைப்பற்றிக் கொள்ளவே முயற்சிக்கின்றது. 

இந்த அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு நல்ல சலுகை வழங்குகின்றது. சமஸ்டி ஆட்சி முன்னெடுக்கப்பட்டால் நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments