வாங்காமம் பயிர்ச் செய்கை நிலங்களுக்கான நீர்ப் பாய்ச்சல் குளம் பொறியியாலாளர் கவனத்தினால் திட்டமிட்டு செப்பனிடுவதற்கான கானி விவசாய அமைச்சரின் ஓப்புதல்..
இறக்காமம் பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட வாங்காமம் 10A/11A கிராம விவசாயிகளின் பயிர்ச் செய்கை நிலங்களின் நீர் பாய்ச்சல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க சேனை பயிர் செய்கையாளர்கள் நெற் பயிர் செய்கையாளர்கள் எல்லோரும் சேர்ந்து தேசிய காங்கிரஸ் கிழக்கு மாகான அமைப்ப்பாளருமான,முன்னாள் கடற்படை பிரிவின் கப்பல்துறை பொறியிலாளருமான இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான ஷெயீத் இஷ்ஹாக் மன்சூர் அவர்களை அழைத்து வந்து முறையிட்டு இருந்த வாங்காமம் பயிர்ச் செய்கை நிலங்களின் பாய்ச்சல் குளமான Thodarikkulam Tank (கீச்சாங் குளம்) செப்பனிடல் குளத்தை ஆழமாக தோண்டுதல் விவசாயிகளின் தேவைகளை முன் மொழிவின் பிரகாரம் அங்கு சென்று பார்வையிட்டிருந்தார்.
பல ஆண்டுகாலமாக சுமார் 250 ஏக்கர் காணி பயிர் செய்கையாளர்கள் பாரிய அசௌகரியங்களை அனுபவித்து வருவதாக நேரில் கண்டுகொண்ட பொறியிலாளர் மன்சூர் அவர்கள்
விவசாயிகளின் தேவையை களத்தில் இருந்து அறிந்து கொண்ட பின்னர் அவற்றுக்கான வேலையின் முன்னெடுப்புக்களை மிக விரைவில் இந்த விவசாயிகளுக்கு தகுந்தமுறையில் அதற்கான உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று இதற்கான வேலை திட்டத்தை மிக மிக நேர காலத்தோடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அன்மையில் வாங்காமம் விவசாயிகளிடம் வக்குறுதி அளித்திருந்தார் பொறியிலாளர் மன்சூர் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாஷா அல்லாஹ் இது சாம்மந்தமாக நேற்று 01-08-2017 அன்று காலை காணி மற்றும் விவசாய அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி செயலாளருமான துமிந்த திஸ்ஸாநாயக்க அவர்களை சந்தித்து அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.
அக்குளத்தை செப்பனிடுதலுக்கான முறையான திட்டமிடலின் பிரகாரம் வேலைகள் ஆரம்பிப்பதற்குமான ஒப்புதல் கடிதத்தை காணி மற்றும் விவசாய அமைச்சரிடம் இருந்து பெற்றிருக்கின்றார் என்பதும் அவரது ஆளுமையுடன் ,சிங்கள மொழிப் பேச்சாற்றல் ,திறம்படச் செய்யும் சேவை மனப்பாங்கோடு இறக்காமம் பிரதேச கிராமங்கள்தோறும் அம்மக்களுக்கு செய்கின்ற சேவைகளைப் பாராட்டுவோம் நன்றியும் தெரிவித்திடுவோம்..
றிஸ்வான் அபூபக்கர்,
இறக்காமம்



Comments
Post a Comment