திருடர்களுக்கு தண்டனை வழங்க சட்டத்தை திருத்துங்கள்: சம்பிக்க


அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை செய்தாவது சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்தி கடந்த காலத்தில் ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதை துரிதப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கொள்ளை, ஊழல்,மோசடி மற்றும் வீண் விரயங்களை தடுக்க வேண்டும் மற்றும் கடந்த காலத்தில் ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதே தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த மக்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.

எனினும் இந்த விசாரணைகளை தாமதப்படுத்துவதாக பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. 

நாங்களும் அந்த குற்றச்சாட்டை முன்வைக்கின்றோம். கடந்த காலத்தில் கொள்ளையிட்டவர்களுக்கு தண்டனை வழங்க சட்ட கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

Comments