கிண்ணியா -பொது நூலகத்திற்கு அருகில் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது
கிண்ணியா -பொது நூலகத்திற்கு அருகில் கேரளா கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவரை நேற்றிரவு (09) கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கிண்ணியா-நடுவூற்று பகுதியைச்சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முஸ்லிம் இளைஞனே (26வயது) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடமிருந்து 200கிரேம் கேரளா கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சோதனையிட்டதாகவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


Comments
Post a Comment