மியன்மார் அகதிகளுக்கு வேறொரு நாட்டில் புகலிடம்

யு.என்.எச்.சி.ஆர் நடவடிக்கை

இலங்­கையில் மிரி­ஹான பொலிஸ் நிலைய விசேட தடுப்பு முகாமில் தங்க வைக்­கப்­பட்­டுள்ள மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­க­ளுக்கு வேறோர் நாட்டில் புக­லிடம் பெற்றுக் கொடுக்க யு.என்.எச்.சி.ஆர். நிறு­வனம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது.
அது­வரை அக­தி­க­ளுக்கு யு.என்.எச்.சி.ஆர். நிறு­வனம் உணவு, கல்வி மற்றும் சுகா­தார வச­தி­களை வழங்­கு­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளது.
இதே­வேளை மிரி­ஹான விசேட தடுப்பு முகாமில் தங்க வைக்­கப்­பட்­டுள்ள மியன்மார் அக­தி­களை அம் முகா­மி­லி­ருந்தும் அகற்றி வேறோர் இடத்தில் கல்­கி­சையில் தங்க வைப்­ப­தற்கு ஐ.நா. யு.என்.எச்.சி.ஆர். நிறு­வனம் அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

குடி­வ­ரவு, குடி­ய­கல்வுத் திணைக்­கள அதி­க­ரிகள் யு.என்.எச்.சி.ஆர். நிறு­வன அதி­கா­ரிகள், ஆர்.ஆர்.ரி அமைப்பின் சட்­டத்­த­ர­ணிகள் மற்றும் தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் ஆகியோர் அடங்­கிய குழு­வினர் வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுடன் நடத்­திய பேச்­சு­வார்த்­தை­க­ளை­ய­டுத்து அமைச்சர் இதற்கு இணக்கம் தெரி­வித்­துள்ளார்.

மியன்மார் ரோஹிங்யா அக­தி­களை மிரி­ஹான தடுப்பு முகா­மி­லி­ருந்து வேறோர் இடத்­துக்கு இடம் மாற்­று­வ­தற்கு குடி­வ­ரவு, குடி­ய­கல்வுத் திணைக்­களம் நீதி­மன்றின் அனு­ம­தி­யினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரி­வித்­த­தை­ய­டுத்து மியன்மார் அக­திகள் எதிர்­வரும் 17 ஆம் திகதி காங்­கே­சன்­துறை நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு நீதி­மன்றின் அங்­கீ­காரம் பெறப்­ப­ட­வுள்­ளது என ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் தெரி­வித்தார்.

இந்­தி­யா­வி­லி­ருந்து படகு மூலம் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு மியன்மார் ரோஹிங்யா அக­திகள் மேற்­கொண்ட பய­ணத்­தின்­போது படகு கோளா­றுக்­குள்­ளா­ன­தை­ய­டுத்து கடலில் தத்­த­ளித்த நிலையில் அவர்கள் வடக்கு கடல் எல்­லையில் கடற்­ப­டை­யி­னரால் மீட்­கப்­பட்டு நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். பின்பு அவர்கள் மிரி­ஹான தடுப்பு முகா­முக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டனர். இவ் அக­தி­களில் 7 ஆண்கள், 7 பெண்கள், 16 பிள்­ளைகள் என 30 பேர் அடங்­கு­கின்­றனர்.

இவ் அக­தி­களின் இளம் பெண் ஒருவர் மிரி­ஹான பொலிஸ் நிலைய கான்ஸ்­டபிள் ஒரு­வ­ரினால் பல­வந்­த­மாக பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டு அடையாள அணி வகுப்பின்போது பாதிக்கப்பட்ட பெண்ணினால் இனங்காணப்பட்டார்.

Comments