மூதூர் : புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக முகமது தாரீக்
மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக மூதூரைச் சேர்ந்த கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தரான சேகு சத்தார் முகமது தாரீக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமையினை வியாழக்கிழமை (17) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பல மாதங்களாக மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளருக்கான வெற்றிடம் நிலவி வந்த நிலையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் இந் நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment