வனபரிபாலனத் திணைக்களத்திற்கு எதிராக வடக்கு மாகாணசபை நீதிமன்றத் தடை உத்தரவொன்றினை உடனடியாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். அ.அஸ்மின் கோரிக்கை.
n.m. abdullah
(வியாழன் 24-8-2017) இடம்பெற்ற வடக்கு மாகாணசபை அமர்வில் வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும், முன்னைய நாள் சுகாதார அமைச்சருமான கௌரவ ப.சத்தியலிங்கம் அவர்கள் வவுனியா மாவட்டத்தின் வனபரிபாலனத் திணைக்களத்தினர் முன்னெடுத்துவரும் அத்துமீறல்கள் குறித்த கவனயீர்ப்புப் பிரேரணையொன்றினை சபையில் பிரேரித்தார். அதனை வழிமொழிந்து பேசிய வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள், வனபரிபாலனத் திணைக்களத்திற்கு எதிராக வடக்கு மாகாணசபை நீதிமன்றத் தடை உத்தரவொன்றினை உடனடியாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இதுவிடயத்தில் நாம் நீண்டகாலமாக அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றோம். இயற்கைய வளங்களைப் பாதுகாத்தல் அவசியம் என்று நாமும் இயற்கைக்கு ஆதரவாக குரல்கொடுக்கின்ற, முயற்சிகளை மேற்கொள்கின்றவர்கள்தான், ஆனால் வனபரிபாலனத் திணைக்களம் என்ற பெயரிலே எமது முன்னேற்றங்களைத் தடுக்கின்றன, மக்களின் மீள்குடியேற்றத்தைத் தடுக்கின்ற ஒரு முயற்சியை மத்திய அரசாங்கம் முன்னெடுக்கின்றது. நீண்டகாலமாக வடக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களையும் ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தின் மூலம் வரைபுகளை மேற்கொண்டு, அவற்றை வரைபுகளில் நிர்ணயித்து, மக்களின் காணிகள் பல பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசங்களாக எல்லையிடப்படுகின்றன. இவை குறித்து மாவட்ட மட்டங்களில் இடம்பெறுகின்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் நாம் பேசுகின்றோம், அங்குவரும் அதிகாரிகள் எமது கருத்துக்களை செவிமடுத்துவிட்டு நாம் அவற்றை நடைமுறைப்படுத்துகின்றோம் என்று கருத்துக் கூறிவிட்டுச் செல்கின்றார்கள், ஆனால் அவை அங்கு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை, இத்திணைக்களத்தின் செயற்பாடுகளினால் எமது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றார்கள். இதனை தொடர்ந்தும் அங்கீகரிக்க முடியாது. எனவே உடனடியாக நீதிமன்றத்தை நாடி இவர்களின் நடவடிக்கைகளுக்கான ஒரு தடையுத்தரவை நாம் முதலில் கோரவேண்டும், அதன் பின்னர் நீதிமன்ற நடைமுறையொன்றினூடாக வடக்கு மாகாணத்தின் வனபரிபாலனத்திணைக்களத்தின் செயற்பாடுகள் என்ன என்று தீர்மானிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
இங்கு கருத்து வெளியிட்ட மற்றுமொரு மாகாணசபை கௌரவ எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள், கௌரவ உறுப்பினர் அஸ்மின் குறிப்பிடுவதை நானும் வழிமொழிகின்றேன், வனபரிபாலனத்திணைக்களம் தம்மை இயற்கையின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு பல்வேறு அநீதிகளை செய்திருக்கின்றார்கள், மன்னாரிலே பல நூறுஆண்டுகள் பழமையான சிவாலயங்கள், பள்ளிவாயல்களை பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேச எல்லைகளாக மாற்றியுள்ளார்கள், இது அநீதமான செயற்பாடாகும். என்றும் தெரிவித்தார்.
வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சி.தவராசா அவர்களும் மேற்படி விடயம் நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுவதை தானும் வரவேற்பதாகக் குறிப்பிட்டார். இதுவிடயத்தில் கௌரவ முதலமைச்சர் அவர்களின் அவதானத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் நீதிமன்ற நடவடிக்கையினை வடக்கு மாகாணசபை முன்னெடுக்கும் என்ற தீர்மானம் அவைத்தலைவர் கௌரவ சீ.வி.கே.சிவஞாம அவர்களினால் அறிவிக்கப்பட்டது.
தகவல் எம்.எல்.லாபிர்

Comments
Post a Comment