யாழ் ஒஸ்மானியா கல்லூரி அதிபர் பதவிக்கு போதுமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறவில்லை. அ.அஸ்மின்
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின் தற்போதைய அதிபர் ஜனாப் எம்.எஸ்.எம்.அஷ்ரப் அவர்கள் ஓய்வுபெற்றுச் செல்கின்ற காரணத்தினால் வெற்றிடமாகவுள்ள அதிபர் பதவிக்கு அதிபர்கள் எவரேனும் விண்ணப்பித்துள்ளார்களாக என்று கோரியபோது; வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள், வடக்கு மாகாண கல்வி அமைச்சு இதற்கான விளம்பரத்தினை ஒரு மாதத்திற்கு முன்னர் பிரசுரித்திருந்தது, இருப்பினும் போதுமான விண்ணப்பங்கள் வந்து சேரவில்லை என்று கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன என்றும் வடக்கு மாகாணத்தினுள் பொறுத்தமான விண்ணப்பதாரி இல்லாத சமயத்தில் தேசிய ரீதியில் அதிபர் ஒருவரைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண கல்வி வலயப் பணிப்பாளர் திரு தெய்வேந்திரராஜா அவர்கள் தெரிவித்ததாகவும், மேல், மத்திய, வடமேல் அல்லது கிழக்கு மாகாணத்தில் இருந்து பொறுத்தமான அதிபர் தரம் ஒன்றினைச் சேர்ந்த முஸ்லிம் அதிபர் ஒருவரைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிப்பதே சிறப்பானது என்று ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் மாகாணசபை உறுப்பினர் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்; அதிபர் நியமனம் கல்வி அமைச்சின் பொறுப்பில் உள்ள விடயமாகும், அதனை நாம் முன்னெடுக்க முடியாது. ஆனால் பொறுத்தமான அதிபர்கள் இருப்பின் அவர்களை குறித்த பதவிக்கு விண்ணப்பிக்குமாறு நாம் ஊக்கப்படுத்தலாம், மாறாக அவர்களை நியமிக்கும் பணிகளை நாம் முன்னெடுக்க முடியாது. அத்தோடு இதுவரையான தகவல்களின் பிரகாரம் 2017 ஒக்டோபர் மாதத்திற்குள் ஒரு புதிய அதிபரை யாழ் ஒஸ்மானியாவிற்குப் பெற்றுத்தர வடக்கு மாகாண கல்வி அமைச்சு முயற்சிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது என்றும் குறிப்பிட்டார்.
தகவல்: எம்.எல்.லாபிர்


Comments
Post a Comment