வவுனியா: புகையிரதம் – முச்சக்கரவண்டி மோதி விபத்து : ஒருவர் பலி


கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதத்தில் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடந்து செல்ல முற்பட்ட முச்சக்கர வண்டி மீது புகையிரதம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டி சாரதியான உயிரிழந்த இளைஞன் ஈச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.கிருபா (28) என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது

Comments