பொலனறுவையில் போதைப்பொருள் வர்த்தகம்! கொழும்பு இளைஞர் கைது


பொலனறுவைப் பிரதேசத்தில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட கொழும்பு பிரதேச இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹபரணை பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது குறித்த போதைப் பொருள் வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசாரினால் கைது செய்யப்பட்ட நபர் களனிப் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய சிங்கள இளைஞர் என்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரிடமிருந்து மூன்று 3.400 கிராம் எடைகொண்ட போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. வாரம் தோறும் குறித்த நபர் போதைப்பொருளை எடுத்து வந்து பொலனறுவை, ஹபரணை, தம்புள்ளை மற்றும் சீகிரிய பிரதேசங்களில் விற்பனை செய்து வந்ததாக பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளைய தினம் கெக்கிராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஹபரணைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Comments