வீடியோ - கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பிழையானது:-

Ihzana Fareed

கல்குடா, வாழைச்சேனை, ஓட்டமாவடி –மீராவோடையிலுள்ள சக்தி வித்தியாலய மைதான காணி குறித்த பாடசாலைக்கு சொந்தமானது எனக் கூறப்படுகின்ற பிரச்சனை தொடர்பாக அரசியல் மற்றும் நிருவாக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட  உயர்மட்ட கலந்துரையாடல் கடந்த 19.08.2017 சனிக்கிழமை கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர்களின் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த உயர்மட்ட குழு கலந்து கொண்ட கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களையும், கருத்துக்களையும் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ள அதே நேரத்தில் அவ்வாறான கருத்துக்கள் அனைத்தும் ஆதாரபூர்வமற்றதாகவும், உண்மைக்கு புறம்பானாதாகவும் உள்ளது என நாபீர் பெளண்டேசனின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பதிகாரியும், கல்குடா தொகுதி அமைப்பாளரும், முன்னாள் முஸ்லிம் காங்கிரசின் கல்குடா தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும், சமூக ஆர்வலருமான சாட்டோ வை.எல்.மன்சூர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு குறித்த உயர்மட்ட குழு கலந்து கொண்ட கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களையும், கருத்துக்களையும் எதற்காக ஏற்றுக்கொள்ள முடியாது என்பது சம்பந்தமாக சாட்டோ வை.எல்.மன்சூர் தெரிவித்த ஆதாரபூர்வமான கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டு.






Comments