திருடன் யாராக இருந்தாலும் திருடன் திருடன் தான் ! -விஜேதாச
திருடர் யாராக இருந்தாலும் அவர் திருடர் தான். பச்சை நிறம், நீல நிறம் என்ற வேறுபாடு கிடையாது. யாராக இருந்தாலும் திருடர் திருடர் தான் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பௌத்த சங்கமொன்றின் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த நாட்டில் வழக்கு விசாரணை செய்ய வெளிநாட்டிலிருந்து குழுவொன்றை வரவழைக்க பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. நீதிமன்றம் சுயாதீனம் இல்லையெனக் கூறினர். எமது நாட்டிலுள்ள சட்டத்திட்டங்களுக்கு அமையவே நாம் சட்டத்தை நிலைநாட்டுவோம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Comments
Post a Comment