கிணற்றில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி
திருகோணமலை ஆனந்தபுரி பகுதியில், கிணற்றில் மூழ்கி 15,16 வயதுடைய சிறுவர்கள் இருவர், பலியாகியுள்ளதாக, உப்புவெலி பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை, தீர்வைநகரைச் சேர்ந்த எம்.ஹேமதரன் (வயது 16) மற்றும் ஆனந்தபுரியைச் சேர்ந்த கே.புவிராஜ் (வயது 15) ஆகிய இருவருமே, இவ்வாறு கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நண்பர்களான மேற்படி இருவரும் இன்று பகல், ஆனந்தபுரியிலுள்ள பொதுக் கிணற்றில் குளிப்பதற்காகச் சென்றபோதே, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில், இருவரின் சடலங்களும் வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில், உப்புவெலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Comments
Post a Comment