செவ்வாயில் பனி மலைகள் – நாசா தகவல்


செவ்வாய் கிரகத்தில் பனி படர்ந்த குன்றுகள் இருப்பதை செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மூலம் நாசா உறுதி செய்துள்ளது.
குறித்த தகவலை செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் நாசாவின் மார்ஸ் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் (Mars Reconnaissance Orbiter) உறுதி செய்துள்ளது.
இந்த புகைப்படமானது அதி உயர் ரெசொல்யூஷன் கொண்ட இமேஜிங் அறிவியல் பரிசோதனை திறன் கொண்ட கேமரா (High Resolution Imaging Science Experiment – HiRISE ) மூலம் மே மாதம் 21 ஆம் தேதி எடுக்கப்பட்டது.
இந்த புகைப்படத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தில் பனி மலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், செவ்வாயில் காணப்படும் பனி மலைகள், பூமியில் உள்ள பனி மலைகள் போல அல்லாமல், பனி மற்றும் கார்பன் டை ஆக்சைடு கலந்து உலர்ந்த பணி போல் காட்சியளிப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments