புனித மக்காவில் இன்று அறபா! நிந்தவூர் மற்றும் மாத்தளையில் பெருநாள்!
புனித மக்காவில் லட்ச கணக்கான மக்கள் இன்று அறபா பெருவெளியில் ஒன்றுகூடும் புனிதமிக்க வேளையில் ஒரு புதுமையான "கும்பல்" ஒன்று பெருநாள் கொண்டாடிய சம்பவம் நிந்தவூர் மற்றும் மாத்தளையில் இடம்பெற்றுள்ளது!
கணிப்பீட்டு கலண்டர் முறையில் இன்று தாங்கள் பெருநாளை கொண்டாடுவதாகவும், இன்று காலை தொழுகை நடைபெற்றது எனவும் நிந்தவூரில் குறித்த அவ்வமைப்பின்றின் சார்பில் சமீர் என்பவர் தெரிவித்தார்.
இவ்வமைப்பின் பிறைக் கணிப்பின்படி இன்று துல்ஹஜ் பிறை 10 எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலகில் எப்பாகத்திலும் பிறை தென்படாத நிலையில் கடந்த 23 ம் திகதி தென் ஆபிரிக்கா மற்றும் சிம்பாபேயில் பிறை தென்பட்டது.
இதனடிப்படையில் இன்று புனித மக்கா உட்பட சர்வதேச பிறை-9 ஆகும். இன்றைய தினம் அறபா பெருவெளியில் ஹாஜிகள் தரிக்கின்றனர்.
இது இவ்வாறிருக்கையில் கணணி கணிப்பீட்டின் அடிப்படையில் இன்று ஒரு "கும்பல்" நிந்தவூர் மற்றும் மாத்தளையில் பெருநாள் கொண்டாடுவது கண்மூடித்தனமான செயற்பாடு என பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் உயிரிழந்த இந்தியாவை சேர்ந்த "சின்ஹ்" எனும் ஒருவரின் கொள்கையை பின்பற்றியே இவ்வமைப்பினர் இன்று பெருநாளை கொண்டாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
-அல்மஷூறா நியூஸ்








Comments
Post a Comment