பெண்ணுக்கு அழைப்பெடுத்தவர் கந்தளாய் பொலிசாரால் கைது
பெண்ணொருவருக்கு அநாமோதைய அலைபேசி அழைப்புகளை எடுத்து வந்த வென்ராசன்புர பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவர், நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளாரென, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர், கந்தளாய் நகரிலுள்ள பெண்ணொருவரை ஒரு தலைப்பட்சமாக நீண்டகாலமாகக் காதலித்து வந்த நிலையிலே, அப்பெண்ணுக்கு தினமும் இரவு பகல் வேளையில் அநாமோதைய அழைப்புகளை எடுத்து வந்த நிலையிலே பெண்ணின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


Comments
Post a Comment