புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன?
வெளிவிவகார அமைச்சுப் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்க விலகியுள்ள நிலையில் குறித்த அமைச்சிற்கு அமைச்சர் திலக் மாரபன நியமிக்கப்படலாம் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அபிவிருத்திப் பணிப்பொறுப்புகள் அமைச்சராக திலக் மாரபன இருக்கும் அதேவேளை, வெளிவிவகார அமைச்சுப் பதவியும் அவருக்கு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நேற்று பாராளுமன்றிலிருந்து அமைச்சர்கள் களைந்து செல்லும் போது புதிய அமைச்சராக திலக் மாரபன நியமிக்கப்படுவாரா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் சாதகமான பதில் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது


Comments
Post a Comment