பாவம் செய்ய மாத்திரமே நாம் பயப்படுவோம் ! 


பௌத்த பிக்குகளான தாங்கள் பாவம் செய்வதற்கு மற்றுமே பயப்படுவோம் எனவும் வேறு எந்த ஒரு விடயத்திற்கும் பயப்பட மாட்டோம் என பொதுபல சேனா பொது செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்டி நேர்காணல் ஒன்றில் பௌத்த பிக்கு என்ற வகையில் நீங்கள் யாருக்கு பயம் என அவரிடம் வினவப்பட்ட போது அவர் மேற்கண்டவாறு பதில் வழங்கியிருந்தார்.
பிறகு ஏன் நீங்கள் அண்மையில் மறைந்து இருந்ததாக பலர் கூறினார்களே என அவரிடம் வினவப்பட்ட போது அதற்கு பதில் அளித்த அவர்,
அச்சம் பயம் காரணமாக நான் மறைந்திருக்கவில்லை இனத்துக்காக போராடும் போது எமக்கு ஏற்படும் ஆபத்துக்குகள் அதிகம் அதற்காக நாம் பல உபாயங்களை மேற்கொள்ள வேண்டி உள்ளது அந்த வகையில் மேற்கொள்ளப்பட்ட உபாயம் ஒன்றே அது என அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் சம்பிக உங்களை மறைத்து வைத்ததாக சிலர் கூறுகிறார்களே என அவரிடம் வினவப்பட்ட போது.
சம்பிக ரனவக ஒரு கெபினட் அமைச்சர் அவ்வளவுதான் அவர் எங்களுக்கு பெரிய ஒரு ஆள் இல்லை. நாம் அவர்களுடன் ஒரு காலத்தில் சேர்ந்து வேலை செய்தோம் இப்போது அவர்களுக்கு எம்மோடு தொடர்பில்லை.
அவரும் அதனை கூறிவிட்டார் அவ்வளவுதான் என ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

Comments

  1. கொலை, கொள்ளை, களவு, தீ வைத்தல், பொய், மது, மாது, லைசன்ஸ் இன்றி வாகனம் செலுத்துதல், குழப்பம் விளைவித்தல், இனவாதத்தைத் தூண்டல், தூஷித்தல், தூஷணம் பேசல் போன்றவை பாவம் இல்லையா!

    ReplyDelete

Post a Comment