கொடுத்த #வாக்குறிதியை #நிறைவேற்றி #வைப்பதுதான் #தேசிய #காங்கிரஸின் #கைங்கரியம்
தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சருமான கௌரவ அல்-ஹாஜ் ALM அதாவுல்லாஹ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த ஏப்ரல் மாதம் இறக்காமப் பிரதேச வாங்காமம் 10A கிராமம் பள்ளிவாயலில் பரிமாறப்பட்ட கந்தூரி உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட சமூக வல்லுறவு அதிகாரமளித்தல் மற்றும் நலன்புரி அமைச்சர் கௌரவ
S B திஸ்ஸாநாயக்க அவர்களை வரவளைத்து வந்திருந்தார்.
அன்று இதனால் உயிரிழந்தோரின் மூன்று குடும்பங்களுக்கும் மற்றும் உயிரிழந்தவரின் பென் பிள்ளை ஒருவருக்கும் அடங்கலாக அவர்களின் அடிப்படை வாழ்வாதாரம் நிலை கருதி நான்கு வீடுகள் அமைக்க நிதியுதவி வழங்குவதாக கௌரவ அமைச்சரினால் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்ததை அம்பாரை மாவட்ட மக்கள் அனைவரும் அறிந்த விடயம்.
அதற்கமைய தேசிய காங்கிரஸ் தலைவர் ALM அதாவுல்லாஹ் வினதும் இறக்காமப் பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவரும் முன்னாள் கடற்படைப்பிரிவு கப்பல் துறைப் பொறியியலாளர் அல்ஹாஜ் ஷெயீத் இஷ்ஹாக் மன்சூர் அவர்களின் அயராத பின்தொடர்ந்து அமைச்சின் உயர் அதிகாரிகளை தொடர்ந்தும் தொடர்பில் இருந்த முயற்சியினால் கிடைத்த வெற்றியின் முதற் கட்டமாக நான்கு வீடுகளுக்கான தலா 100,000 ரூபா காசோலை பாதிக்கப்பட்ட நான்கு குடும்பத்தினர்களுக்கும் வழங்கப்பட்ட நிகழ்வு 17-08-2017 அன்று இறக்காமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற்றிருந்தது.
இந்நிகழ்வில் பிரதம அதீதியாக சமூக நலன்புரி அமைச்சின் நிறைவேற்று உயர் அதிகாரியும்,அம்பாரை மாவட்ட சமூர்த்தி ஆணையாளரும்,இறக்காமப் பிரதேச செயலாளரும் மற்றும் இறக்காமப் பிரதேச ஒருங்கிணைப்பு இணைத்தலைவர் அவர்களும் கலந்து கொண்டு அக் காசோலைகளை வழங்கி இருந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.. கொடுத்த வாக்குறிதிகளை நிறைவேற்றி வைப்பதுதான் தேசிய காங்கிரஸின் கைங்கரியம் என்பதை நிறுபித்திருக்கின்றமைக்கான சான்றாக அமைந்துள்ளமை மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
றிஸ்வான் அபூபக்கர்,
இறக்காமம்.





Comments
Post a Comment