வெற்றிக்கிண்ணம் வழங்கி வைப்பு
Ihzanas Fareed
அகில இலங்கை ரீதியாக 16 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி நேற்று(6) கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் நடைபெற்றது.
மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டியின் சம்பியனாக தெரிவான யாழ் ஹென்றி கல்லூரி மாணவர்களுக்கும் Runner up ஆக தெரிவான கொழும்பு ஸாஹிரா கல்லூரி மாணவர்களுக்கும் வெற்றிக் கேடயங்களை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் வழங்கிவைத்தார்.
நிகழ்வில் கௌரவ விருந்தினராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஆர். எம். அன்வர் மற்றும் அகில இலங்கை பாடசாலைகளுக்கான உதைப்பந்தாட்ட சம்மேளனத்தலைவர் திரு. ஹேமந்த அபயக்கோன், பொருளாளர் திரு.அர்ஷாத், செயலாளர் திரு.திஸாநாயக்க, மாவட்ட உதைப்பந்தாட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. நபீல் ஆசிரியர், மற்றும் அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.



Comments
Post a Comment