வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உலர் நிவாரணம்
Ihzana Fareed
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உலர் நிவாரணம் வழங்கும் செயற்பாடுகள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது ஆலோசனைக்கமைய முறைப்படி இடம்பெற்று வருகிறது.
13 மாவட்டங்களை உள்ளடக்கியதாக தற்போது அமுல்படுத்தப்படும் இந்த செயற்திட்டத்தில் மா, பருப்பு, சீனி, கடலை, ரின் மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் உலர் நிவாரணமாக வழங்கப்படுகின்றன.
மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களினால் தெரிவுசெய்யப்பட்ட விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் ஊடாக உலர் நிவாரணம் வழங்கப்படுகிறது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், கடந்த ஜூலை 30 ஆம் திகதி கெப்பிற்றிப்பொலவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
தொடர்ச்சியாக மூன்று போகங்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபடாமையினால் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் வழங்கிய ஆலோசனைக்கமைய தற்போது உலர் நிவாரணம் வழங்கப்படுகிறது.
அத்துடன் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீர் வினியோகமும் தற்போது முறைப்படி இடம்பெறுகின்றது. அச்செயற்பாடுகளுக்காக மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு உதவுவதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதற்மைய வறட்சியால் பாதிக்கப்பட்ட 20 மாவட்டங்களிலுள்ள 117 பிரதேச செயலக பிரிவுகளில் இரண்டரை லட்சம் மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்ய பரந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி செயற்பாடுகளை முறைமைபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ அவர்களது தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (21) முற்பகல் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகம், அனர்த்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, நகர திட்டமிடல் மற்றும் நீர்வினியோக அமைச்சு, உள்நாட்டலுவல்கள் அமைச்சு, நிதி அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் திட்டத்தை இரவிலும் விரிவுபடுத்துவது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டதுடன், புதிய நீர்தாங்கி வாகனங்களை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் அந்த மக்களின் ஏனைய தேவைகளுக்காக நீரை வழங்கும் முறை மற்றும் வனவிலங்குகளுக்கு நீர் வழங்குதல் தொடர்பிலும் கடைந்துரையாடப்பட்டு, அச்செயற்பாடுகளை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
அனுராதபுரம்இ சிராவஸ்திபுர விவசாயிகளுக்கான முதற்கட்ட உலர் நிவாரணம் வழங்கும் செயற்பாடு நேற்று (21) முற்பகல் சிராவஸ்திபுர பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தில் ஆரம்பமானது.
4500 பேர் பிரதேசத்தில் உலர் நிவாரணம் பெற தகைமை பெற்றுள்ளனர். எஞ்சியோருக்கும் நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெறவுள்ளது.
கிழக்கு நுவரகம் பலாத்த பிரதேசத்தில் 4606 விவசாயிகள் தகைமை பெற்றுள்ள அனுராதபுரம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினால் அவர்களில் 3000 பேருக்கு இன்று பிற்பகல் உலர் நிவாரணம் வழங்கப்பட்டது.
கடும் வறட்சியால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டமையால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள மக்கள் உலர் நிவாரணம் வழங்கியமைக்காக ஜனாதிபதி அவர்களுக்கு இதன்போது நன்றி தெரிவித்தனர்.
அஸீம் கிலாப்தீன்

Comments
Post a Comment