சென்ற தலைமுறைக்கு பரிச்சயமான பாடசாலை 'இன்ஸ்பெக்டர்' முறை மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.
பாடசாலை பரிசோதகர் (School Inspector) முறைமையை நாடளாவிய ரீதியில் மீண்டும் கொண்டு வருவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்த இரண்டு மாத காலத்திற்குள் அமுல்படுத்த கல்வியமைச்சு எதிர் பார்த்துள்ளதாகவும் அறிவிக்கப்பட் டுள்ளது.
பாடசாலை பரிசோதகர் முறைமை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கோட்டக் கல்வி அலுவலக முறைமை கொண்டுவரப்பட்டமையால் கல்வியமைச்சால் கைவிடப்பட்டது.
பாடசாலை மேற்பார்வையை பலப்படுத்துவதற்கும், பாடசாலை கண்காணிப்பை பயனுள்ளதாக்கும் விதத்தில் மேற்படி முறை மீண்டும் அமுலுக்கு கொண்டு வரப்படுகிறது.
பாடசாலை பரிசோதகர் முறைமை அமுலுக்கு கொண்டுவரப்படுவதனால் கோட்டக் கல்வி அலுவலக முறை ஒழிக்கப்படும் எனவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. பாடசாலை பரிசோகதர்


Comments
Post a Comment