ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது


சுமார் ஒரு கோடியே நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான 16 தங்க பிஸ்கட்டுக்களை பொலிஸுக்கு அறிவிக்காமல் தம்மகத்தே வைத்திருந்த இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பேசாலை கடல் பகுதியில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு செல்லப்படவிருந்த குறித்த 16 தங்க பிஸ்கட்டுகள் சம்பந்தமாக பேசாலை பொலிஸ் கான்ஸ்டபிள் இருவருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனைத்தொடர்ந்து பொலிஸ் இரகசிய பிரிவினர் என தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட குறித்த பொலிஸார் கைது செய்வதாக கூறி தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
ஒரு தங்க பிஸ்கட்டில் 12 பவுன் தங்கம் இருப்பதாகவும் ஒரு பிஸ்கட்டின் விலை ஆறரை இலட்சம் ரூபா வரை இருப்பதாகவும் முழு தங்க பிஸ்கட்டுக்களின் விலை ஒரு கோடியே நன்கு இலட்சம் ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments