மட்டக்களப்பில் கௌரவிக்கப்பட்ட அமைச்சர் சரத் பொன்சேகா
ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரியாலயம் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டதுடன், அமைச்சர் சரத் பொன்சேகாவும் கௌரவிக்கப்பட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மகேஸ்வரன் தலைமையில், மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் அமைச்சர் சரத் பொன்சேகா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மகேஸ்வரனினால் அமைச்சர் சரத் பொன்சேகா நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த திறப்பு விழாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



Comments
Post a Comment