கருப்பு பணம்: நாமல் – யோசித்த நீதிமன்றில் ஆஜர்
மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்கள் நாமல் மற்றும் யோசித்தவின் கருப்பு பண விவகார வழக்குகள் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நாமலுக்கு எதிரான 70 மில்லியன் மோசடி வழக்கும் யோசித்த மற்றும் அவரது பாட்டிக்கு எதிரான 521 மில்லியன் ரூபா வழக்கும் விசாரிக்கப்பட்டிருந்த நிலையில் யோசித மோசடி செய்து கொள்வனவு செய்ததாக கூறப்படும் காணி தொடர்பில் அதன் பெறுமதி தொடர்பான ஆவணங்களை எதிர்வரும் 21ம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.
நாமலின் வழக்கு விவகாரத்தில் வேறு யாரையும் கைது செய்யும் தேவையில்லையெனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கு முன்பாக இவ்வழக்குகளின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment