மூதூர் : வாக்குவாதத்தில் சபான் மீது கத்திக் குத்து
மூதூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ஆனைச்சேனை பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞன் நேற்றிரவு (06) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்கானவர்கள் மூதூர், சாமி நகர் பகுதியைச்சேர்ந்த என்.எம்.சபான் (19வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விளையாட்டு மைதானத்தில் இரண்டு பேருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதமே கத்தியால் குத்துவதற்குறிய காரணமென பொலிஸ் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

Comments
Post a Comment