தேசிய மட்டம் தெரிவு


அண்மையில் மட்டக்களப்பில் இடம் பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் 14 வயதின் கீழ் குண்டு போடுதல் நிகழ்ச்சியில் 02 ஆம் இடத்தினைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட தோப்பூர் அல்ஸிபா வித்தியாலய மாணவன் ஹாறூன் முஹமட் அஸ்கியினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ்.ஏ.றஹீம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (01) இடம் பெற்றது.

இதில் அதீதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், தோப்பூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.ஏ.ஜப்பார் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

Comments