வினாப்பத்திரம் வெளியான சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது
உயர்தர பரீட்சையின் இரசாயன வினாத்தாளிலுள்ள வினாக்கள் சிலவற்றை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த துண்டுப்பிரசுரத்தை அச்சிட்ட அச்சகத்தின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா பிரதேசத்தின் பரீட்சை நிலையமொன்றிற்கு முன் இரசாயனவியல் வினாப்பத்திரத்தின் வினாக்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தமை தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடொன்று கிடைத்திருந்தது.
இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் அப்பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில் அவரது தந்தையும் சகோதரரும் நேற்று கம்பஹா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி கைது செய்யப்பட்டிருக்கும் மூவரும் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கம்பஹா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


Comments
Post a Comment