பிரதமர் ரணிலுக்கு வாழ்த்து கூறிய மகிந்த அணியினர்! நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடிய ஆதரவாளர்கள்


40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையை பூர்த்தி செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துக் கூறியுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கைக்கு வாழ்த்துக் கூறும் விசேட நிகழ்வு நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு பிரதமர் வந்திருந்த போது கூட்டு எதிர்க்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துக் கூறியுள்ளனர்.

இதேவேளை, பிரதமருக்கு வாழ்த்துக் கூறும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் ஒன்று கூடியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments