மைத்திரி பக்கம் சாயும் மகிந்த ஆதரவாளர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவாளர் ஒருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசிய வட மத்திய மாகாண பிரதித் தலைவர் ஜயந்த மாரசிங்க எதிர்வரும் சில நாட்களில் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்து கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிழந்த போது கூட்டு எதிர்க் கட்சியின் ஆதரவாளராக அவர் இருந்தார்.
எனினும், தற்பொழுது ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதிக்கு இவர் ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக வட மத்திய மாகாணத்திற்கு தெரிவாகி அரசியலில் ஈடுபட்டுவருகின்றார். அவர் கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment