கூட்டு எதிர்க் கட்சியிலிருந்து மற்றுமொருவர் ஜனாதிபதியின் பக்கம் பாய்ச்சல்


கூட்டு எதிர்க் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த வட மத்திய மாகாண சபையின் பிரதித் தலைவர் ஜயந்த மாரசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று (22) ஜனாதிபதியைச் சந்தித்து தனது ஆதரவை அறிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து எதிர்வரும் நாட்களில் இன்னும் பலர் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அவர் இச்சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

ஜயந்த மாரசிங்க, பொலன்னறுவை மாவட்டத்தில் வடமத்திய மாகாண சபைக்கு தெரிவாகி கடந்த 20 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர், மஹிந்த குழுவுடன் இருந்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகமகே ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கியிருந்தார்

Comments