ஓட்டமாவடியில் நவீன வசதிகள் கொண்ட அலங்கார பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு


கல்குடாவிற்கு வரும் உல்லாசப் பயணிகளை கவர நவீன முறையில் சிகை அலங்காரத்தை தொழிலாக செய்பவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிகை அலங்கார சங்கத்திற்கு நவீன வசதிகள் கொண்ட அலங்கார பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.

சிகை அலங்காரத்தை தொழிலாக செய்பவர்கள் உல்லாச பயணிகளை கவரும் வகையிலும், சுத்தம் சுகாதாரத்துடன் சேவையை செய்யும் முகமாக நவீன முறையில் மாற்றுவதற்கு முதல் கட்டமாக உதவிகளை வழங்கியுள்ளேன்.

அதன் மூலம் தங்களுடைய தொழிலை மேம்படுத்திக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சிகை அலங்கார சங்கத்தின் உறுப்பினர்கள் பதின் மூன்று பேருக்கு ஆறு இலட்சம் பெறுமதியான சிகை அலங்கார பொருட்கள் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டது.




Comments