நாட்டில் மொழிப் பிரச்சினையைத் தீர்த்தால் அரைவாசிப் பிரச்சினை தீர்ந்துவிடும்


மொழிப் பிரச்சினையைத் தீர்ப்பதன் ஊடாக தேசிய பிரச்சினையில் ஐம்பத்தொரு வீதத்துக்கு தீர்வுகண்டுவிட முடியும் என சகவாழ்வு, தேசிய மொழிகள் மற்றும் கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள தேசிய பிரச்சினையில் 51 வீதம் மொழிப்பிரச்சினையாகும். எஞ்சியதே அதிகாரப்பகிர்வாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மொழிப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் அரசாங்க நிறுவனங்களில் உள்ள சகல படிவங்களையும் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதுடன், நாடு முழுவதிலும் 3300 மொழி அதிகாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் நேற்று பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

Comments