தோப்பூர் பாத்திமா மகளிர் கல்லூரி மாணவர்களும் பெற்றார்களும் கவலை
பாடசாலை ஆரம்பித்து 90 வருடங்களை தாண்டியும் தோப்பூர் பாத்திமா மகளிர் கல்லூரியில், இன்னும் க.பொ.த உயர் தரப்பிரிவில் கணித விஞ்ஞான வர்த்தகப்பிரிவுகள் ஏற்படுத்தப்படவில்லையென மாணவர்களும் பெற்றார்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
மூதூர் கல்வி வலயத்திலுள்ள இப்பாடசாலையில் தரம் 01 முதல் 13 வலையான வகுப்புகள் உள்ளதுடன், உயர்தரத்தில் கலைப்பிரிவு மாத்திரமே உள்ளது.
இங்கு உயர் தரத்தில் கணித விஞ்ஞான வர்த்தக பிரிவுகளில் கல்வி பயில வசதி வாய்ப்புகள் இன்மை காரணமாக இப்பகுதி மாணவர்கள் சிரமத்துடன் ஏனைய இடங்களுக்குச் சென்று பெருமளவு பணத்தைச் செலவிட்டு, கல்வி பயில வேண்டிய அவல நிலை காணப்படுகிறது.
இதனை கருத்திற்கொண்டு, இப்பாடசாலையிலும் இப்பிரிவுகளை ஏற்படுத்திக்கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.


Comments
Post a Comment