முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை மாற்றம் – கல்வி அமைச்சின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு
முஸ்லிம் பாடசாலைகளுக்கு இன்று வழங்கப்படவிருந்த விடுமுறையை இரத்துச் செய்ய கல்வி அமைச்சு எடுத்த தீர்மானம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளுக்கு இன்று வழங்கப்படவிருந்த இரண்டாம் தவணை விடுமுறையை அவசரமாக இரத்துச் செய்தமை கல்வி அமைச்சின் திட்டமிடல் அற்ற செயற்பாடு என அச்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று (18) வழங்கப்படவிருந்த விடுமுறை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு நேற்று அறிவுறுத்தல் விடுத்திருந்தது. அதன்படி, எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் 8 ஆம் திகதி வரை இந்த விடுமுறை காலம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


Comments
Post a Comment