நீதி அமைச்சர் பொறுப்பாக செயற்படவில்லை- பிரதி அமைச்சர் அஜித் சாடல்
நாட்டின் நீதி அமைச்சர் தனது பொறுப்பை சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும் என மின் சக்தி எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
நிறைவு செய்யப்பட்ட 88 ஊழல் மோசடி விசாரணைகள் லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தும், அவற்றில் 15 ஊழல்களுக்கு எதிராகவே வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது பொலிஸாருடன் தொடர்புபட்ட பிரச்சினையல்ல. மாறாக சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கும் நீதி அமைச்சுக்குமே இந்தப் பிரச்சினை பொறுப்பானது.
கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் அரசியலமைப்பு தொடர்பான செயலமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.


Comments
Post a Comment