ஊழலுக்கு ஆதரவாக குரல் கொடுக்க சொன்னால் விலகி விடுவேன்: சஜித் பிரேமதாச
ஊழலுக்கு ஆதரவாக குரல் கொடுக்குமாறு நல்லாட்சி அரசாங்கத்தில் எவராவது கோரிக்கை விடுத்தால், பதவிகளை கைவிட்டு சென்று விடுவேன் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஊழல் நடக்காது என்ற வாக்குறுதியை வழங்கியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவது குறித்து பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் மகிழ்ச்சியடைவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்
குற்றம் சுமத்திய காரணத்தினால் மாத்திரம் எவரும் பதவிகளை இராஜினாமா செய்ய தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Comments
Post a Comment